இலங்கை அணி அயர்லாந்து அணிக்கெதிராக பலமான நிலையில்

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் நிறைவில் அயர்லாந்து அணி 07 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்களை பெற்றுள்ளது. பிரபாத் ஜெயசூர்யா ஐந்தாவது தடவை ஐந்து விக்கெட் பெறுதியினை பெற்றுக் கொடுத்துள்ளார். விஸ்வ பெர்னாண்டோ இரண்டு ஆரம்ப விக்கெட்களை ஒரே ஓவரில் கைப்பற்றி அயார்லாந்து அணியை தடுமாற வைத்தார். அயர்லாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேம்ஸ் மக்கலொம் 35 ஓட்டங்களையும், ஹரி ரெக்டர் 34 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். லோர்கன் ரெக்டர் ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இலங்கை மற்றும், அயர்லாந்து அணிகளுக்கிடையிலான இந்த முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (16.04) ஆரம்பித்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி திமுத் கருணாரட்ன, குஷல் மென்டிஸ், டினேஷ் சந்திமால், சதீர சமரவிக்ரம ஆகியோரின் சதங்கள் மூலம் 06 விக்கெட்களை இழந்து 591 ஓட்டங்களை பெற்றுள்ளது.

திமுத் கருணாரட்ன மற்றும் நிஷான் மதுசங்க ஆகியோர் 64 ஓட்டங்களை ஆரம்ப இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் திமுத் மற்றும் குஷல் இணைந்து அழுத்தங்களின்றி இலகுவாக ஓட்டங்களை பெற அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்து சென்றது. இருவரும் இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக 281 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். குஷல் மென்டிஸ் 140 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அதனை தொடர்நது மைதானத்துக்கு வருகை தந்த அஞ்சலோ மத்தியூஸ் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.

183 ஓட்டங்களை சதீரசமரவிக்ரம மற்றும் டினேஷ் சந்திமால் ஆகியோர் 183 ஓட்டங்களை ஏழாவது விக்கெட் இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர்.

டிமுத் கருணாரட்ன 179 ஓட்டங்கள் மூலமாக இலங்கை அணிக்காக கூடுதலான டெஸ்ட் ஓட்டங்களை பெற்றுக் கொண்டவர்கள் வரிசையில் அரவிந்த டி சில்வாவை பின் தள்ளி ஐந்தாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அயர்லாந்து அணியின் பந்துவீச்சில் கேர்ட்டிஸ் கம்பர் இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். ஜோர்ஜ் டொக்ரல், பென் வைட், மார்க் அடர், அன்டி மக்பிரைன் ஆகியோர்தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இலங்கை அணி அயர்லாந்து அணிக்கெதிராக பலமான நிலையில்

Social Share

Leave a Reply