மினுவாங்கொடை தனியார் பாடசாலை ஒன்றில் புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதாக கூறி பெண் ஆசிரியை ஒருவரை வலுக்கட்டாயமாக கட்டித்தழுவிய அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடவத்தையில் வசிக்கும் 61 வயதுடைய இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் ஆங்கில ஆசிரியையாக கடமையாற்றிய 23 வயதுடைய பெண் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அப்பாடசலையின் அதிபர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி சந்தேகநபர் பலவந்தமாக தம்மை கட்டித்தழுவிபோது, அன்றைய தினத்திற்கான பாடசாலை பணிகளை முடித்துவிட்டு தான் பாடசாலையை விட்டு வெளியேற தயாராக இருந்ததாக பாதிக்கப்பட்ட ஆசிரியை தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.