பள்ளிவாசலில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக 118 இற்கு அழைப்பு!

அலவத்துகொட பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக அலவத்துகொட பொலிஸ் நிலையத்தின் 118 அவசர இலக்கத்தின் ஊடாக தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

நேற்று (18.04) அதிகாலை 2.45 மணியளவில் இந்த இரகசியத் தகவல் கிடைத்த போதிலும், இந்த அச்சுறுத்தலை உறுதிப்படுத்தும் வகையில் புலனாய்வு அறிக்கை எதுவும் கிடைக்கவில்லை என அலவத்துகொட பொலிஸ் நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், அந்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply