மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இடம்பெற்ற மலேசியன் இன்விடேசனல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் பங்கேற்று இந்தியாவுக்கு 5 தங்க பதக்கங்களை வென்று பெருமை சேர்த்து உள்ளார்.
வேதாந்த் 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஆகிய பிரிவுகளில் தங்க பதக்கங்களை தட்டி சென்று சர்வதேச அளவில் பெருமை சேர்த்துள்ளார் என நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மேலும், கடந்த ஆண்டில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, ஆடவர் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் ஆகிய பிரிவுகளில் கலந்து கொண்டு 3 தங்க பதக்கங்களையும் மற்றும் 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் பிரிவில் 2 வெள்ளி பதக்கங்களையும் வென்று தன் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.