பெங்களூர் அபார ஆரம்பத்தினால் முன்னேற்றம்

ரோயல் சலஞ்சேர்ஸ் பெங்களுர் மற்றும், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் பெங்களுர் அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் விராத் கோலி மற்றும் பப் டு பிளேஸிஸ் ஆகியோரின் அபாரமான துடுப்பாட்டத்தின் மூலமும், மொஹம்மட் சிராஜின் சிறந்த பந்து வீச்சு மூலமும் வெற்றி பெற்று 06 புள்ளிகளோடு ஐந்தாமாதிடத்துக்கு முன்னேறியுள்ளது.

முதலில் துடுப்பாடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. கோலி 59(47) ஓட்டங்களையும், பப் டு பிளேஸிஸ் 84(56) ஓட்டங்களையும் பெற்றனர். இவர்களது இணைப்பாட்டம் 137 ஓட்டங்கள். இருப்பினும் மற்றையவர்கள் சிறப்பாக துடுப்பாட தடுமாறியமையால் ஓட்டங்களை மேலும் அதிகரிக்க முடியவில்லை. பந்துவீச்சில் ஹர்ப்ரீட் ப்ரார் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய பஞ்சாப் அணி 18.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் ப்ரப்சிம்ரன் சிங் 46 ஒட்டங்களையும், ஜிதேஷ் ஷர்மா 41 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொகமட் சிராஜ் 4 விக்கெட்டுகளையும், வனிந்து ஹஸரங்க 02 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பெங்களூர் அபார ஆரம்பத்தினால் முன்னேற்றம்

Social Share

Leave a Reply