டெல்லி கப்பிட்டல்ஸ் அணி கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக பெற்ற வெற்றியின் மூலம் இந்த வருட தொடரில் முதல் வெற்றியினை பதிவு செய்துள்ளது. ஆறாவது போட்டியில் முதல் வெற்றியினை பதிவு செய்து இரண்டு புள்ளிகளைப் பெற்றுள்ளனர். அதன்படி இம்முறை விளையாடும் சகல அணிகளும் வெற்றிகளை பதிவு செய்துள்ளன. டேவிட் வோர்னரின் சிறந்த ஆரம்பம் மற்றும் டெல்லியின் பந்துவீச்சு என்பன வெற்றிக்கு முக்கியமான காரணமா அமைந்தது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 127 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ஜேசன் ரோய் 43(39) ஓட்டங்களையும், அன்றே ரசல் 38(31) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, அன்ரிச் நோக்கியா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து தடுமாறி வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் டேவிட் வோர்னர் 57(41) ஓட்டங்களையும், மானிஷ் பாண்டி 21(23) ஓட்டங்களையும், அக்ஷர் பட்டேல் 19(22) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி, அங்குல் ரோய், நிதிஷ் ராணா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
