IMF திட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றம்!

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி உடன்படிக்கை தொடர்பான பாராளுமன்ற விவாதத்தின் வாக்கெடுப்பு இன்று (28 .04) பிற்பகல் இடம்பெற்றது.

இந்த வாக்கெடுப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினால், 48 மாதங்களுக்கு நீடிக்கப்பட்ட, 2.9 பில்லியன் டொலர் நிதி வசதி பெற்றுக்கொள்ளப்படுவதற்கான இந்த உடன்படிக்கை, கடந்த மாதம் 22ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

Social Share

Leave a Reply