தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தேசிய மற்றும் சர்வதேச பதக்கங்களை வென்ற விளையாட்டு வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வும் சிநேகபூர்வ சந்திப்பும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் திரு.ரொஷான் ரணசிங்க தலைமையில் ஹெயன்துடுவவில் உள்ள தேசிய இளைஞர் சேவை மன்ற விளையாட்டு பயிற்சி நிலையத்தில் நேற்று முன்தினம் (29) இடம்பெற்றுள்ளது.
அங்கு தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் 1991 ஆம் ஆண்டு எஸ்.ஏ.ஜி.யின் தலைமையில் கரப்பந்தாட்ட, வழிப்பந்தாட்ட அணிகளின் தலைவர்கள், போட்டியின் பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனைகள் அமைச்சரால் பாராட்டப்பட்டனர்.
அந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
இலங்கையின் தேசிய கொடியை உலகின் முன் எடுத்து செல்ல விளையாட்டுதான் விரைவான வழி என அமைச்சர் தெரிவித்தார். தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளில்
தேசிய அளவில் விளையாட்டில் ஈடுப்பட்ட வீரர்கள் மிகவும் குறைவு என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எப்போதும் நாம் எதிர்காலத்தில் வெற்றிபெற கடந்த காலத்தை நாம் சிந்திக்க வேண்டும் எனவும், அரசியல்வாதிகள் பார்க்க அல்லது பேச விரும்பாதவர்களாக இருந்த காலம் போய்விட்டது எனவும் இனியேனும் நாம் சரியான வழியில் பயணத்தை ஆர்மபிக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களை பொறுத்தமட்டில், அரசியல்வாதிகள் சரியான பாதையில் செல்ல வேண்டும், நாட்டிற்கான தங்கள் கடமையை நிறைவேற்றும் முக்கிய பொறுப்பிலிருக்கும் அதிகாரிகள் திறம்பட சேவையாற்ற வேண்டும் என எண்ணுகின்றனர். அதேபோல் மக்களும் ஒன்றிணைத்து செயற்பட வேண்டும் அப்போதுதான் இந்த நாடு முன்னேற்றம் காண முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று இந்த சபையில் விளையாட்டை விரும்பும் தேசிய மற்றும் சர்வதேச பதக்கம் வென்றவர்கள் உள்ளனர், மூத்த விளையாட்டு வீரர்களின் குழுவினர் உள்ளனர், எனினும் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் யாரும் தேசிய, மாகாண அல்லது மாவட்ட விளையாட்டு சங்கங்களில் பதவி வகிக்கவில்லை, இவ்வாறான விடயங்களை தான் நாம் மாற்றி அமைக்க வேண்டும் இதை மாற்றாமல் நாட்டில் விளையாட்டு துறையை கட்டியெழுப்ப முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஓர் அமைச்சர் என்ற வகையில் இந்நிலையை மாற்றியமைக்க நாம் தீர்மானித்துவிட்டதாகவும், எனவே சட்ட திட்டங்களை மாற்றி அமைத்ததாகவும், விளைத்து சார்ந்த எந்த அமைப்பிலும் இரு ஆண்டுகளுக்கு மேல் எவரும் பதவிகளில் இருக்க முடியாது, அடுத்தவர்களுக்கு அதே வாய்ப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பல சட்ட திட்டங்கள் தொடர்பிலும், மாற்றி அம்மைக்கு வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் தாம் அதிக கவனம் எடுக்கவுள்ளதாக தெரிவித்த அமைச்சர். அங்குள்ள அணைத்து வீர வீராங்கனைகளுக்கு தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.










