மதுபானசாலைகள், மாமிச விற்பனை நிலையங்கள் மூன்று நாட்களுக்கு மூடல்!

எதிர்வரும் வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு மதுபானசாலைகள் மற்றும் இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விசாக பௌர்ணமி தினமான 5ம் திகதி மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் இரண்டு நாட்களிலும் (06 மற்றும் 07) மதுபானக் கடைகள் மற்றும் இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெசாக் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் அன்னதான நிகழ்விகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அன்னதானத்தின் வகை, வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை, இடம், சுற்றுச்சூழலின் தன்மை போன்றவற்றைக் குறிப்பிட்டு அனுமதி பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களினால் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் சமைத்த உணவுகள் என்பனவற்றை பரிசோதிக்கும் பணியும் தொடர்ந்து நடைபெறும் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply