நுவரெலியா மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ள நிலை ஏற்டபட்டுள்ளதுடன் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று (30.04) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக நுவரெலியா கந்தப்பளை பிரதேசத்தில் பல இடங்களில் வெள்ள நிலை உருவாகியுள்ளதுடன் சில குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கந்தபளை பிரதேசத்தில் அதிகமான விவசாய நிலங்கள் நீரிலில் மூழ்கியுள்ளது.
தொடரும் மழை மற்றும் பனி மூட்டமான காலநிலை காரணமாக அப்பிரதேசத்தில் பயணிக்கும் வாகன சாரதிகள், வேகா கட்டுப்பாட்டுடன், பாதுகாப்பாக பயணிக்குமாறு நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.