பொலன்னறுவை தேசிய பாடசாலைக்கு புதிய வசதிகள்!

பொலன்னறுவை கவுடுளுவெவ மஹிந்த தேசிய பாடசாலையில் துடுப்பாட்டப் பயிற்சி நடவடிக்கைகளுக்காக துடுப்பாட்ட மைதானமும் ஆங்கிலப் பிரிவும் அமைக்கப்பட்டு, மாணவர்களின் பயன்பாட்டுக்காக இன்று (02.05) கையளிக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பாசன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி கூடத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் பாடசாலைக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கட்டுமானங்களுக்காக, தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதியில் இருந்து பாடசாலை மேம்பாட்டு நிதிக்கு நேரடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கல்விப் புத்தாக்கத் திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட ஆங்கிலப் பிரிவும் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் மாணவர்களுடன் தமது கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார்.

அமைச்சர் கூறியதாவது,

”தேசிய அளவில் கல்வியை மாற்ற வேண்டும். இது பள்ளியிலும் வீட்டிலும் செய்யப்பட வேண்டும். ஜப்பான் நாட்டில் பாலர் பாடசாலையில் பொறுமை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் கற்றுக்கொடுகிறார்கள். சிங்களம் இந்த நாட்டின் தேசிய மொழி என்பதில் எதுவித மாற்று கருத்தும் இல்லை, எனினும் ஆங்கிலம் கல்வி மொழியாக இருக்க வேண்டும். இந்த விடையத்தில் நாம் மாற்றம் காண வேண்டியது அவசியம். சிங்கப்பூரில் தெருவில் சீன மொழி பேசப்படுகிறது ஆனால் அந்நாட்டின் கல்வி மொழி ஆங்கிலம்.”

”நீங்கள் உலகின் முன் செல்ல விரும்பினால், இந்த மாற்றத்தை நீங்கள் ஆரம்பிக்க வேண்டும். தேசிய பெருமையை நாம் கொண்டு வர வேண்டும். அருகிலுக்க பாடசாலை சிறந்த பாடசாலை எனும் கருத்தை கொண்டுவர வேண்டும்”

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் என்பன 14-15 வயது பிள்ளைகளுக்கும் ஏற்படுகிறது எனவே விளையாட்டை கட்டாயமாக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், விளையாட்டையும் கல்வியையும் இணைக்கும் சில கோரிக்கைகள் அனைத்தும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் பொலன்னறு மாவட்ட சங்கநாயக்க மாதிரிகிரிய பௌத்த நிலையத்தின் தலைவர் வண. அஸ்ஸாஜி தேரர், வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் சங்கநாயக்க வண. சிறிகேத சிறீ சீவலி நாயக்க தேரர் , பொ/கவுடுலுவெவ மஹிந்த தேசிய பாடசாலையின் வண. சாசனரதன தேரர், கல்வி நிறுவனங்களின் அதிகாரிகள், பாடசாலை நண்பர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

பொலன்னறுவை தேசிய பாடசாலைக்கு புதிய வசதிகள்!

பொலன்னறுவை தேசிய பாடசாலைக்கு புதிய வசதிகள்!

பொலன்னறுவை தேசிய பாடசாலைக்கு புதிய வசதிகள்!

பொலன்னறுவை தேசிய பாடசாலைக்கு புதிய வசதிகள்!

பொலன்னறுவை தேசிய பாடசாலைக்கு புதிய வசதிகள்!

பொலன்னறுவை தேசிய பாடசாலைக்கு புதிய வசதிகள்!

பொலன்னறுவை தேசிய பாடசாலைக்கு புதிய வசதிகள்!

பொலன்னறுவை தேசிய பாடசாலைக்கு புதிய வசதிகள்!

Social Share

Leave a Reply