விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபட FUTA தீர்மானம்!

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் கூட்டமைப்பு (FUTA) 2022 ம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீட்டில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று (04.05) முதல் க.பொ.த. உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணியில் ஈடுபடுவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் க.பொ.த. உயர்தர பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடப்போவதில்லை என அறிவித்திருந்த நிலையிலேயே இன்று இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply