தேர்தலில் போட்டியிடுபவர்கள் பணிக்கு திரும்பும் வர்த்தமானி

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் அவர்களது வழமையான பணி இடங்களுக்கு திரும்பும் வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 08 ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்படுமென மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புற தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் காரணமாக தேர்தலில் போட்டியிடும் அரசாங்கத்தில் பணிபுரியும் வேட்பாளர்கள் அவர்களது வட்டாரங்களுக்கு அண்மையில் உள்ள இடங்களில் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தல் தொடர்ந்தும் பிற்போடப்பட்டு வரும் நிலையில் அரச ஊழியர்கள் அவர்களது வழமையான பணி இடங்களுக்கு செல்வதற்கான அனுமதியை அமைச்சரவை அண்மையில் வழங்கி இருந்தது.

Social Share

Leave a Reply