வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (06.05) மேலும் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மழைவீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு உட்பட பல பிரதேசங்களில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதாகவும், கடந்த 24 மணித்தியாலங்களில் நீர்கொழும்பில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply