பேக்கரி உற்பத்தி விலைகளில் மாற்றமில்லை!

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டாலும், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டின் 75% க்கும் அதிகமான பேக்கரிகள் நாட்டில் உற்பத்தி செய்யும் இரண்டு நிறுவனங்களிடமிருந்து கோதுமை மாவை பெற்றுகொள்கின்றன.

குறித்த கோதுமை மாவை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் விலையை அதிகரித்தால் மட்டுமே பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அதன் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா தொடர்பில் பேக்கரிகளுக்கு எவ்வித சிக்கலும் இல்லை எனவும், நாட்டில் உள்ள இரண்டு நிறுவனங்களிடமிருந்தும் ஒரு கிலோ 210 ருபாய் அல்லது 215 ரூபா என்ற விலையில் பேக்கரிகளுக்கு கோதுமை மா வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply