தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலை வீதி பகுதியில் இருவர் மீது சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த தாக்குதலில் தில்ஷான் ரங்க குமார எனும் 27 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு நபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த சத்பவத்துடன் தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்த லொறி, வேன் மற்றும் முச்சக்கரவண்டி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.