சுப்ரமணியன் சுவாமி இலங்கை வந்தார்

இந்திய மத்திய அரசின் முன்நாள் அமைச்சர் சுப்ரமணியன் சுவாமி, இன்று காலை தனி விமானம் மூலமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இன்று மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில், அலரிமாளிகையில் நடைபெறுகின்ற நவராத்திரி விழாவில் சுப்ரமணியன் சுவாமி கலந்துகொள்ளும் அதேவேளை, இலங்கை இராணுவத்தின் 72ஆவது நிறைவை​யொட்டி நடாத்தப்படும் இராணுவ கருத்தரங்கில் பங்குபற்றி உரையாற்றவுள்ளார்.

இலங்கை வந்த பாரதிய ஜனதா கட்சியின் முக்கியஸ்தரான சுப்ரமணியன் சுவாமியை, விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப-தலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர்.

சுப்ரமணியன் சுவாமி இலங்கை வந்தார்

Social Share

Leave a Reply