பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்!

பிரபல திரைப்பட நடிகர் சரத்பாபு தனது 71வது வயதில் காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று (22.05) உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழில் பட்டினபிரவேசம், நிழல் நிஜமாகிறது, அண்ணாமலை, முத்து போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்த தனக்கென ஒரு பெயரை ரசிகர்கள் மத்தியில் நிலைநாட்டியவர் நடிகர் சரத்பாபு.

தமிழில் இறுதியாக இந்தாண்டு வெளியான வசந்தமுல்லை படத்தில் நடித்திருந்தார்.

அவரின் மறைவிற்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருவதுடன், குடும்பத்தினருக்கு தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply