புறக்கோட்டையில் இயங்கிய ஐந்து ஹோட்டல்களுக்கு சீல்!

புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் இயங்கி வந்த 05 ஹோட்டல்களை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனியின் ஆலோசனையின் பிரகாரம், புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் அமைந்துள்ள ஹோட்டல்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் விசேட பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்த பின்னர், மோசமான சுகாதாரத்தை பேணிய 05 ஹோட்டல்களை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான பொது சுகாதார பரிசோதகர் கே ஏ அபேரத்ன, கோட்டை பொது சுகாதார பரிசோதகர் டபிள்யூ. டி.டி விக்கிரமரத்ன உள்ளிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply