வவுனியாவில் புதிய நாடு புதிய கிராமம் திட்டத்தின் மூலம் சான்றிதழ் பதிவு சேவை!

வவுனியா பிரதேச செயலகத்தால் நடத்தப்படும் புதிய நாடு புதிய கிராமம் எனும் திட்டத்தின் மூலம் பதியப்படாத பிறப்பு இறப்பு திருமணங்களை பதிவு செய்வதற்கான நடமாடும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 9ம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, வவுனியா பிரதேச செயலக குணநாயகம் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நடமாடும் சேவையின் மூலம் காலம் கடந்த பிறப்பினை பதிவு செய்வதற்காக பூரணப்படுத்தப்பட்ட B6 படிவம், தேடுதல் விளைவு, வைத்தியசலை அறிக்கை / மருத்துவ தாதி அறிக்கை, பெற்றோரின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் விவாக சான்றிதழ், பாடசலை அதிபர் அறிக்கை, பாடசாலை விடுகை பத்திரம், CRI படிவம், தடுப்பூசி அட்டை, உள்ளடக்கிய கோவைகளை இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் தயார் செய்து பிரதேச செயலக மாவட்ட பதிவாளர் கிளையில் உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

காலம் கடந்த பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள விரும்பும் மக்கள் குறித்த நடமாடும் சேவையில் பயன்பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Social Share

Leave a Reply