எதிர்வரும் 29ம் திகதி ஆரம்பமாகவுள்ள 2022ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் (2023) தொடர்பான பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள குறித்த அறிக்கையில், பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அட்டைகளை தடுத்து வைக்க வேண்டாம் என பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அனுமதி அட்டைகள் கிடைக்காத காரணத்தினால் எந்தவொரு மாணவரும் பரீட்சைக்குத் தோற்ற முடியாத நிலை ஏற்படின் அதற்கு அதிபரே பொறுப்பேற்க வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.