இலங்கையின் முன்னாள் இராஜதந்திர அதிகாரி ஜெயந்த தனபால காலமானார்.
கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறக்கும் போது 85 வயதான ஜெயந்த தனபால, அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இராஜதந்திர அதிகாரியாகப் பணியாற்றியதோடு, ஜெனீவாவில் இலங்கையின் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் 1998-2003 க்கு இடைபட்ட காலத்தில் ஐக்கிய நாடுகளின் ஆயுதக் குறைப்பு விவகாரங்களுக்கான அலுவலக துணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.