நாளை (30.05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (28.05)அறிவித்திருந்தார்.
இதன்படி, பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 22 லீற்றரும், ஏனைய முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 14 லீற்றரும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மோட்டார் சைக்கிள்களுக்கு வாரத்திற்கு 14 லீற்றரும், கார்களுக்கு வாரத்திற்கு 40 லீற்றரும் எரிபொருள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எரிபொருளின் விலையும் இந்த வாரத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
அதன்படி, உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால், இந்த வாரத்தில் அதன் நலன்கள் நாட்டு மக்களுக்கு கிடைக்கும் வகையில், எரிபொருளின் விலை மேலும் குறைவடையும் எதிர்பாக்கப்படுகிறது.