காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் மீது துப்பாக்கிச்சூடு!

பத்தரமுல்லை கூட்டுறவு காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராகப் பதவியேற்கச் சென்ற தர்ஷன் சமரவிக்ரம மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

பாதுக்க கெமுனு மாவத்தையில் இன்று (05.06) காலை 7.35 மணியளவில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 62 வயதுடைய நபர் தற்போது ஹோமாகம ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மெகொட பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தனது வீட்டிலிருந்து வல்பிட்ட கெமுனு மாவத்தை நோக்கி செல்ல காரில் ஏற முற்பட்டபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியில் இருந்து நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் இதற்கு முன்னர் கூட்டுறவு காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த நுகேகொட பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் மீகொட பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply