யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலைப் பகுதியில் 10 வயது சிறுவன் ஒருவன் ஹெரோயின் போதைப்பொருளை பயன்படுத்திய சந்தர்ப்பத்தில் பருத்தித்துறை பொலிஸார் நேற்று (04.06) கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சிறுவனை தேடி கண்டுபிடித்து பரிசோதித்தபோது, அவர் ஹெரோயின் பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளதுடன், குறித்த சிறுவனிடமிருந்து மற்றுமொரு ஹெரோயின் பொதியினை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
தன்னை விட வயதில் மூத்தவர்களுடன் ஹெரோயின் பாவனையில் ஈடுபடும் பழக்கம் இருப்பதால் குறித்த சிறுவன் பாடசாலைக்கு செல்வதை நிறுத்திவிட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.