உயிர்க்கொல்லி சுவாச நோய்த்தொற்றான HMPV வைரஸ் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட்-19 நோய் தொடர்பிலான சுகாதார அமைச்சின் தலைமை இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி, இலங்கையில் இதுவரை இந்த வைரஸின் பாதிப்புகள் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளில் இந்த HMPV வைரஸ் அதிகளவில் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கொவிட் தொற்று மற்றும் காய்ச்சலின் அறிகுறிகளைக் கொண்ட இந்த வைரஸ் ஆபத்தான சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த வைரஸ் இதுவரை இலங்கையில் பரவவில்லை எனவும், சுகாதார அமைச்சும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இது தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.