கம்பளை பகுதியில் நேற்று (05.06) இரவு 2 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நில அதிர்வு தரவு மற்றும் சுனாமி எச்சரிக்கை மையத்தின் (SDTAC) சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
பூமியின் மேற்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது தொடர்பில் அறிவிக்க இரண்டு தொலைபேசி அழைப்புகள் மட்டுமே தமக்கு கிடைக்கப்பெற்றதாகவும் SDTAC தெரிவித்துள்ளது.
கம்பளையில் உள்ள புபுரெஸ்ஸ மற்றும் தெல்தோட்டை பகுதிகளுக்கு இடையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.