வெளிநாடுகளில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது.
தொடரும் விலையேற்றத்துக்கு தீர்வு காணும் முகமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் மாவுக்கான வரிச்சலுகை நீக்கப்பட்டது போல, மூலப்பொருட்களுக்கு வரிச்சலுகையை அதிகப்படுத்தி, உற்பத்தியாளர்களுக்கு உதவிடுமாறும். இந்த நிலைக்கு சரியான தீர்மானம் எடுக்காவிட்டால் உற்பத்தியாளர்கள் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.