துபாயிலிருந்து நாடு திரும்பிய இருவருக்கு குரங்கம்மை!

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இருவர் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் இன்று (07.06) உறுதிப்படுத்தியுள்ளனர்.

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது தொற்று நோய் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாயில் இருந்து நாடு திரும்பிய தாய் மற்றும் மகள் ஆகிய இருவருக்கும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையிலேயே குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக சிகிச்சைகளை பெற்று கொள்ளுமாறு வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply