சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்புகளுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் காணப்படும் அதிகரித்த விலேயேற்றமே இலங்கையிலும் இந்த அதிகரிப்பை மீண்டும் செய்ய வேண்டிய நிலையினை ஏற்படுத்தியுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
விலை கூடாதென பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதிலும் பார்க்க,விலை அதிகரிப்பு வாய்ப்புள்ளதென தெரிவிப்பதே சரியானதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.