எதிர்வரும் 17ம் திகதி காலை 07 மணி முதல் 18ம் திகதி அதிகாலை 05 மணி வரை பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டிய ரயில் நிலையத்திற்கு இடையிலுள்ள கொட்டா வீதி ரயில் கடவை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
களனிவௌி மார்க்கத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புனரமைப்பு பணிகள் காரணமாக குறித்த ரயில் கடவை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரயில் கடவை மூடப்படும் காலப்பகுதியில் மாற்று வீதிகளை பொது மக்கள் பயன்படுத்துமாறு ரயில்வே திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.