மாத்தறையில் வெட்டுக்காயங்களுடன் யுவதியின் சடலம் மீட்பு!

மாத்தறை – தொடமுல்ல ஊர்பொக்க பகுதியில் வெட்டுகாயங்களுடன் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.

29 வயதான ஆசிரியர் ஒருவரின் சடலமே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளது.

இறப்பு குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் குறித்த யுவதியின் காதலனே அவரை கொலை செய்திருக்கலாம் எனத் சந்தேகிக்கின்றனர்.

கொலைக்கான காரணங்கள் தெரியவராத நிலையில் பொலிஸார் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply