தொடர்ந்து வீழ்ச்சி காணும் இலங்கை ரூபாய்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (15.06) வீழ்ச்சிக் கண்டுள்ளது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்றும் விகிதத்தின் படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் கொள்முதல் பெறுமதி, 311 ரூபாய் 60 சதமாகவும், விற்பனை பெறுமதி 328 ரூபாய் 92 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை அமெரிக்க டொலரின் விற்பனை விலை உயர்ந்துள்ள நிலையில் உரிமம் பெற்ற மற்ற வணிக வங்கிகளில், விற்பனை விலையானது 335 ரூபாவாகவும், கொள்வனவு விலையானது 315 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Social Share

Leave a Reply