பிரசவத்தின் போது கணவருக்கும் விடுமுறை : புதிய சட்டத்தில் திருத்தம்!

தொழிலாளர் சட்டத் திருத்த சட்டமூலம், அடுத்த மாதம் தொழிலாளர் ஆலோசனைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் ஏழாவது நிகழ்வு நேற்று (14) அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதனையடுத்து இந்த சட்டமூலம் குறித்து மக்களிடம் இதுவரை பெறப்பட்ட கருத்துக்களின் சாரம்சமும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ஆட்சேர்ப்பு மற்றும் பணியிடங்களில் உள்ள பாகுபாட்டை நிவர்த்தி செய்ய சட்டத்தில் புதிய விதிகளை அறிமுகப்படுத்தவும் முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர், புதிய தொழிலாளர் சட்டம் தொழிலாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வேலை நாட்கள் மற்றும் நேரத்தை மாற்றவும் முன்மொழிவதாக தெரிவித்துள்ளார்.

கூடுதல் நேரம் மற்றும் அதற்கான கட்டணத்தை செலுத்துவது தொடர்பாக ஒருமித்த முடிவை எடுக்க திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும், மனைவியின் பிரசவத்தின் போது கணவருக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் ஆராயப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply