வடகொரியா தனது கிழக்குக் கடற்பகுதியை நோக்கி இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை இன்று (15) ஏவியுள்ளது.
அமெரிக்கா-தென்கொரியா ராணுவ ஒத்திகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா மேற்படி ஏவுகணைகளை ஏவியதாக தெரிவிக்கப்படுகிறது.
வடகொரியா கடந்த மே மாதத்தின் இறுதியில் தனது முதல் உளவு செயற்கைக்கோளை ஏவியது. அதன்பிறகு மேற்கொண்ட முதல் சோதனை நடவடிக்கை இதுதான்.
இதேவேளை வடகொரியாவின் ஏவுகணை சோதனையை கண்டறிந்ததாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் கூறினார்.