வவுனியாவில் கறுவா பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கோடு செய்கையாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு நேற்று (18.06) இடம்பெற்றது.
புலம்பெயர் வாழ் தமிழரான சுந்தரமூர்த்தி புவனகுமாரினால் வட பகுதியில் கறுவா செய்கையை ஊக்குவித்து அதனை பணப்பயிராக மாற்றும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஓர் அங்கமாக வவுனியா மாவட்டத்தில் கறுவா செய்கையை ஊக்குவிப்பதற்கும் அது தொடர்பான பெறுமதி சார் உற்பத்தி பொருளாக மாற்றுவது தொடர்பிலும் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது.
இந் நிலையில் நேற்று (18.06) வவுனியா வைரவபுளியங்குளத்தில் கறுவா செய்கையை பயிரிடுவது அதன் பலன்கள் தொடர்பில் செய்கையாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் செய்கை முறைகளும் காட்டப்பட்டது.
இதன் போது கறுவா செய்கையை வட மாகாணத்தில் மேம்படுத்தும் செயற்பாட்டை முன்னேடுத்துள்ள சுந்தரமூர்த்தி புவனகுமார், கறுவா ஆராச்சி நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி ஜி. ஜி. ஜெயசிங்க மற்றும் அவரது குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.
கறுவா பயிர்செய்கையில் ஈடுபட ஆர்வமுள்ளவர்கள் சுந்தரம் சுரேஷ்குமார் என்பவருடன் 0770743133 என்ற தொலைபேசி இயக்கத்துடன் தொடர்பு கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


