ருஹுணு மகா கதிர்காமத்தின் வருடாந்த எசல திருவிழா இன்று (19.06) கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
இதன்நிமித்தம் குறித்த பகுதியை 16 நாட்களுக்கு மதுவிலக்கு வலயமாக வைத்திருப்பதாக கலால் திணைக்களம் உறுதியளித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் ஊவா மாகாண பிரிவுகள், நிலையங்கள் மற்றும் அலகுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளை மிகவும் அவதானமாக இருக்குமாறும் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அனைத்து ஹோட்டல்கள், உணவகங்கள், மதுபானசாலைகள், மற்றும் மதுபானக் கடைகள் ஆகியவற்றில் குறிப்பிட்ட காலப்பகுதியில் மதுபானம் விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத செயற்பாடுகளை கண்காணிக்க சிவில் கும்பல்களின் குழுக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கலால் ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
மது, போதைப்பொருள் மற்றும் புகையிலை தொடர்பான குற்றங்கள் பற்றிய புகார்கள், தகவல் அல்லது குறிப்புகள் ஆகியவற்றைப் பெறுவதற்கு, திணைக்களம் அதன் ஹாட்லைன் 1913 இலக்கத்தை வெளியிட்டுள்ளதுடன், குறித்த சேவை 24 மணி நேரமும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
புனித நகரம் மற்றும் எசல திருவிழா வலயத்திற்கு வருகை தரும் யாத்ரீகர்கள் மதுபானங்களை கொண்டு செல்வதை தவிர்க்குமாறும் கலால் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.