ஐ.நாவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு அழைப்பு!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 53வது அமர்வு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று (19.06) ஆரம்பமாகியது.

இதன்போது, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் டர்க், மனித உரிமைகள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டார்.

குறித்த அறிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் தொடர்பான தீர்மானங்களின் அம்சங்களை இலங்கை அரசாங்கம் வருந்தத்தக்க வகையில் நிராகரித்துள்ளதாக வோல்கர் டர்க் சுட்டிக்காட்டினார்.

கடந்த தசாப்தத்தில் ஐ.நா ஆணையாளர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் எனவும், அவர்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கை அதிகாரிகளை ஊக்குவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உலக மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகும் உலகம் முக்கியமான கட்டத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இனப் பாகுபாடு குறித்து அவசரமாகச் செயல்படவும், குழந்தை உரிமைகள் உட்பட ஆறு மனித உரிமைகள் ஒப்பந்தங்களை அங்கீகரிக்கவும் வோல்கர் டர்க் அழைப்பு விடுத்துள்ளார்.

Social Share

Leave a Reply