போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தன்னை கைது செய்வதை தடுக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீளப்பெறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று (21.06) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, போதகர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தம் கருத்துகளை முன்வைத்து மனுவை மீளப்பெற அனுமதி கோரியுள்ளார்.
அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுவை மீளப்பெற பெற அனுமதி அளித்தது.
போதகர் ஜெரோமுக்கு எதிராக பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த மனுவை விசாரணை செய்யாமலேயே தள்ளுபடி செய்யுமாறு அரச சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்னர் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.