சீன ஜனாதிபதியை குற்றம்சாட்டும் அமெரிக்க ஜனாதிபதி!

சீன ஜனாதிபதி ஓர் சர்வாதிகாரி என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார்.

கலிபோர்னியாவில் நிதி திரட்டும் நிகழ்வில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளின்கென் ஆகியோருக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கு பின்னரே அவர் இதனைத் தெரிவித்தார்.

இரு உலக வல்லரசுகளுக்கும் இடையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், எழுந்துள்ள இந்த சர்ச்சை மிக்க கருத்து தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

இது குறித்து மேலும் விவாதிக்க இருவரும் ஒப்புக்கொண்டள்ள போதிலும், அமரிக்க ஜனாதிபதியின் கருத்துக்கு சீன ஜனாதிபதி இதுவரை பதிலளிக்கவில்லை.

Social Share

Leave a Reply