மலையக தமிழர்களின் காணி உரிமை போராட்டத்தின் ஆரம்ப புள்ளியாக ஏழு பேர்ச் நிலம் வேண்டும் எனக் கோரி அன்றைய மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சர் திகாம்பரத்தால் அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்பட்டதாகவும், இது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றி எனவும் அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் கிருஷ்ணபவான் மண்டபத்தில் நடைபெற்ற மலையக காணியுரிமை மாநாட்டில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், உலகில் நடைபெறும் போராட்டங்களில், பெரும்பாலானவை காணி உரிமை கோரியே நடைபெறுகின்றன. காணி உரிமையே சமூகத்துக்கு தேசிய இன அந்தஸ்த்தை வழங்குகிறது.
வடக்கு கிழக்கில் தேசிய விடுதலை போராட்டம் நிகழ்கிறது. அங்கே போர் ஓய்ந்தாலும், இராணுவ பிரசன்னம் ஓயவில்லை. அதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
இங்கே வாழ, பயிர் செய்ய நிலம் வேண்டும். ஐந்து பேர்ச் என்பதிலிருந்து ஏழு பேர்ச் என்று உயர்த்த பெரும் பாடுபட வேண்டியிருந்தது’ எனத் தெரிவித்துள்ளார்.