தமிழ் மாமன்றம் தனது பத்தாவது ஆண்டு நிறைவை ஒட்டிப் பல்வேறு நிகழ்வுகள் உள்ளடங்கிய “வன்னியின் புத்தகப் பண்பாட்டுத் திருவிழாவை” ஜுன் மாதம் 24/25ம் திகதிகளில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடாத்தவுள்ளது.
பல்வேறு புத்தக நிலையங்களின் ஒன்றிணைவில் மாபெரும் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் நடைபெறவுள்ளதுடன். எங்கள் சுயாதீனத் தமிழ் இளைஞர்களின் ஒன்றிணைவில் பனைசார் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் மலிவு விற்பனையும் இடம்பெறவுள்ளது.
சிறுவர்களுக்கான கதை சொல்லல் நிகழ்வுகள், புத்தக அறிமுக நிகழ்வுகள், எழுத்தாளர்களுடனான கலந்துரையாடல்கள் எனப் பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
வெண்பா, Bukbuk.lk, சேமமடு புத்தககசாலை, பண்டாரவன்னியன் புத்தகசாலை, கல்கி புத்தகநிலையம் ஆகியன பங்குபெறுகின்றன.
இணையத்தின் மிகப்பெரும் ஆவணச் சேகரமான Noolaham.org நிறுவனத்தின் விசேட கண்காட்சிக்கூடமும் இடம்பெறவுள்ளது.