இங்கிலாந்து அரசாங்கத்தின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினரும், ஆலோசகருமான சேர் டேவிட் அமெஸ் கொலை செய்யப்பட்டுளார். 25 வயதான சோமாலியவை சேர்ந்த இங்கிலாந்து பிரஜையினால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன் தினம் (15.10) சேர் டேவிட் அமெஸ் கத்தியால் குத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நிலையில் நேற்று (16/10) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
69 வயதான சேர் டேவிட் அமெஸ், ஆளும் லேபர் கட்சியின் முக்கிய ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முன் தினம் (15/10) தனது வீட்டிலிருந்து சென்று, தேவாலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட வேளையில் இவர் கத்தி குத்துக்கு உள்ளாகியுள்ளார். வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி நேற்று (16/10) உயிரிழந்துள்ளார்.
மென்மையான குணம் கொண்ட, நகைச்சுவையான சிறந்த மனிதராக போற்றப்படும் சேர் டேவிட் அமெஸ் இங்கிலாந்து அரசினால் விரும்பப்படும் ஒருவராகவும், நீண்ட காலமாக அரச ஆலோசகரமாகவும் இருந்துள்ளார்.
இங்கிலாந்தின் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உட்பட பல முக்கிய இங்கிலாந்தின் அரசியல் பிரமுகர்கள் உட்பட பல இவரது மறைவுக்கு தமது அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.
சேர் டேவிட் அமெசின் கொலை ஒரு தீவிரவாத கொலையென இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.