இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் நேற்றிரவு (21.06) குறித்த 22 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய நான்கு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று, கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.