மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்கட்சியினர் இன்று (22.06) சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தன்னிச்சையாக மின்கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் இந்த அநீதி குறித்து விசேட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இதனூடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.