மனித புதைக்குழி விவகாரம் : கோட்டா மீது குற்றச்சாட்டு!

மனித புதைகுழிகள் தொடர்பான உண்மைகளை மறைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொலிஸ் ஆவணங்களில் மாற்றங்களை செய்யதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சர்வதே உண்மை, நீதிக்கான திட்டம், இலங்கையில் ஜனநாயகத்திற்கான திட்டம் மற்றும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் இணைந்து நேற்று (22.06) அறிக்கையொன்றை வெளியிட்டனர். குறித்த அறிக்கையிலேயே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை குழப்புவதற்காக கோட்டாபய ராஜபக்ச பொலிஸ் ஆவணங்களில் மாற்றங்களை செய்து உண்மையை மறைக்க முயன்றார்.

2013 இல் மாத்தளையில் பாரிய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அந்த பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உள்ள ஐந்து வருடங்களிற்கு முந்தைய அனைத்து ஆவணங்களையும் அழித்துவிடுமாறு பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய வேளை கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டார்.

அந்த மனிதபுதைகுழிகள் 1988-89 ஜே.வி.பி. கிளர்ச்சி காலத்தை சேர்ந்தவை என்ற சந்தேகம் காணப்படுகின்றது.

அக்காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ச இராணுவ வீரராக அந்த பகுதியில் கடமையாற்றினார். விசாரணைகளில் தலையிட்டு குளறுபடிசெய்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் பொலிஸ் அதிகாரிகளிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version