மலையகத்தில் தடம் புரண்ட சரக்கு ரயில்!

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயில் ஒன்று தலவாக்கலை மற்றும் வடகொட புகையிரதங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.

இதனால் மலையகப் பாதையில் ரயில் சேவைகள் தாமதமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து தற்காலிக நடவடிக்கையாக, கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் புகையிரதங்களின் பயணிகள் தலவாக்கலை, ஹட்டன் மற்றும் நானுஓயா புகையிரத நிலையங்களுக்கு பேருந்து மூலம் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply