SJBயின் நிலை குறித்து அதிருப்தி வெளியிட்ட ஹிருணிகா!

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) இன் தற்போதைய நிலைமை குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மகளிர் சக்தியின் தலைவியுமான ஹிருணிகா பிரேமச்சந்திர விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

கட்சியின் தலைமை துவத்தை சேர்ந்தவர்கள் இரு முகம் கொண்ட மோசடியாளர்களை மட்டுமே நம்புவதாகவும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

“பகல் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தங்கியிருந்து, இரவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் மது அருந்திக் கொண்டிருக்கும் இருமுகம் கொண்ட நபர்கள், கட்சியில் இருப்பதாகவும், அவர்களை பாம்புகள் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

கட்சிக்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் எமக்கு பதிலாக கட்சித் தலைவர் அவர்களை மட்டுமே நம்புகின்றார்” எனவும் கட்சி தலைவருடன் பேசி அவரை சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்குமாறும் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“விக்கிரமசிங்கவைச் சந்திப்பவர்கள், தங்களுக்கு அமைச்சுக்கள் வழங்கப்பட்டதாக எங்களிடம் கூறுகின்றனர். இவர்கள்ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலில் இருந்து மீண்டும் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஜனாதிபதியுடன் இணைவார்கள் என்வும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயகரா போன்ற எம்.பி.க்களுக்கு எதிராக ஆரம்பத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட வேளையில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தால் எவரும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படத் துணிந்திருக்க மாட்டார்கள் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply