கிளிநொச்சி வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள்,உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் ஆகியோர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் உடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி சேவை சந்தை வர்த்தகர்கள் அதிகரித்த புதிய வரி அறவீடு தொடர்பாக இன்று(23.06) கடைகளை மூடி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து குறித்த போராட்டத்தின் தொடர்ச்சியாக வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள்,உள்ளூராட்சி உதவி ஆணையாளர்,கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் ஆகியோர் மாவட்ட அரச அதிபர் அவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
புதிய வரி அளவானது அதிகமானதாக வர்த்தகர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் வரி தொடர்பில் மீளவும் மீள்மதிப்பீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள். எனவே மீள் மதிப்பீட்டிற்காக பிரதேச சபையின் செயலாளருக்கு மேன்முறையீடு செய்யுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என அரச அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அதேவேளை புதிய வரி சுமையினை சுமக்கமுடியாத நிலைமையினை வெளியிட்ட காரணத்தினால் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வரித்தொகையினை அவர்கள் செலுத்துவதற்கான தீர்மானத்தினை மேற்கொள்ளும் பொருட்டு வடமாகாண ஆளுனரின் ஆலோசனை பெறுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் மேலும் கூறினார்.