2021 ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பு கடற்பரப்பில் எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் மூலம் ஏற்பட்ட இழப்புக்கு நஷ்ட ஈடு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இம்மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கொழும்பு வர்த்தக நீதிமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் ஏனைய அமைப்புகள் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த அறிவிப்பை வழங்கியுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான முகவர் நிறுவனமான சீ கொன்சவேர்டியம் அடங்கலாக 8 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த கப்பலின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அனர்த்தத்துக்கு 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று நீதிமன்றத்தில் மனுவை மாற்றியமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை 26 ஆம் திகதி பிரதிவாதிகள் பதிலளித்தாலோ இல்லையோ நீதிமன்றத்தால் மனு அனுப்பவதா இல்லையா என்ற முடிவும் எடுக்கப்படவுள்ளது.